» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் தனியார் சந்தை கால்கோள் விழா: சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:45:57 PM (IST)

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழா நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டக்குளத்தில் தனியார் தினசரி சந்தைக்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்த சந்தை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும், முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி பல்வேறு அமைப்பினர் இன்று காலை கருப்புக் கொடி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். மேலும் தெற்கு திட்டக்குளத்தில் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். விழா அழைப்பிதழில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் அவர்கள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)








