» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதலர் தினம்: தூத்துக்குடியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு - விற்பனை அதிகரிப்பு!
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:07:50 PM (IST)

காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் விலையும் உயர்ந்துள்ளது.
ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. ஒரு ரோஜா விலை ரூ.30 எனவும், 20 பூக்கள் கொண்ட கட்டு விலை ரூ.500க்கும் விற்பனையாகிறது.
இது குறித்து பூ மார்க்கெட்டில் சாய்பாபா மலரகம் உரிமையாளர் ஏஎம் கண்ணன் கூறியதாவது "காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் ஓசூர் மற்றும் பெங்களூரில் இருந்து குறைந்த அளவே வந்துள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததாலும் பனிப்பொழிவு காரணமானாலும் பூக்கள் உற்பத்தி தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு ரூ.20 க்கு விற்பனை செய்த பூக்கள் இந்த ஆண்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் பொதுமக்களிடையே அதிக அளவு ஆர்வமுள்ளதால் பூக்கள் விற்பனை அமோகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
