» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்: கோவில்பட்டியில் 23 பேர் கைது!
வியாழன் 13, பிப்ரவரி 2025 10:53:48 AM (IST)

கோவில்பட்டியில் சபாநாயகர், அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் சென்ற 23பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து ஐந்தாம் தூன் நிறுவனத் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் தமிழ் பேரரசு கட்சியினர், 5வது தூண் அமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் 23 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தெற்கு திட்டங்குளத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
