» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:52:44 AM (IST)
தூத்துக்குடி மீன்வளத் துறையை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் கடந்த சில ஆண்டுகளாக விசைப்படகு மீனவர்கள் தங்களுக்கு மீன்கள் சரிவர கிடைக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 10-ந்தேதி முதல் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மீன்வளத் துறை அதிகாரிகள், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இன்று 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் ரூ.6 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
