» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாகனங்களில் கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் : வாலிபர் கைது!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:13:48 AM (IST)
காயல்பட்டினத்தில் 1¾ டன் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வாலிபரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். லோடு ஆட்டோ, ஆம்னி கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா் ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு காவலா் ஸ்டீபன் அங்கு சென்றபோது, லோடு ஆட்டோ மற்றும் ஆம்னி காா் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இதை பாா்த்த தனிப்பரிவு காவலா் இரு வாகனத்தையும் மடக்கி பிடித்து சோதனையிட்டாா்.
இரு வாகனத்திலும் 50 கிலோ வீதம் 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் 35 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்த பயன்படுத்திய இருவாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது தாெடர்பாக காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி பாண்டி மகன் வேம்படி முத்து (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










