» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வறுமையை விரட்ட கல்வி அவசியம்: முன்னாள் ஐ.ஜி., எம்.எஸ்.முத்துசாமி அறிவுரை

புதன் 12, பிப்ரவரி 2025 3:16:35 PM (IST)



வறுமையை விரட்ட கல்வி அவசியம் என கோவில்பட்டியில் நடைபெற்ற  போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்  கருத்தரங்கில் முன்னாள் ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமி பேசினார்.

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் கண்ணன், கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் தேபோரால் அனைவரையும் வரவேற்றார்.

கருத்தரங்கினை தமிழக காவல்துறை முன்னாள் ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது: 
மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுதி உயர் பதவிகளுக்கு வர வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு திருக்குறளின் அடிப்படை விசயங்களை கற்க வேண்டும். அதோடு தமிழ் இலக்கியத்தையும் வாசிக்க வேண்டும், வறுமையை விரட்ட கல்வி அவசியம், கல்வி ஒரு அற்புதமான ஆயுதமாகும். படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் எதிலும் வெல்லலாம், கல்வியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், போட்டித் தேர்வுகளுக்கான அனைத்து வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு முயற்சியும் பயிற்சியும் செய்தால் ஒளிமயமான எதிர்காலம் அமையும், இவ்வாறு பேசினார்.

இதில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண்,தங்கமணி,மேனாள் வேளாண்மை துறை இணை இயக்குனர் சங்கர் எஸ். நாராயணன், மேனாள் மின்சார வாரிய செயற்பொறியாளர் நம்பிராஜன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்து முருகன்,நடராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர். வரலாற்றுத்துறை பேராசிரியர் கதிரேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ஆனந்தகுமார் சிறப்பாக செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory