» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் ஆசிரியர்களிடம் கட்டாய வசூல்: ‍ திருமண்டல நிர்வாகம் மீது புகார்!

புதன் 12, பிப்ரவரி 2025 10:29:08 AM (IST)

தூத்துக்குடியில் திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியர்களிடம் ரூ.10ஆயிரம் கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இயங்கிவரும் விஜிஎஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் கட்டாயமாக ரூ.10ஆயிரம் பணம் வசூலிப்பதாக வட்டக்கோவில் ஜான்சன் டேவிட் என்பவர் வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் வீடியோ வீடியோ வெளியிட்டுள்ளார். 

திருமண்டல நிர்வாகத்தின் பெயரில் இவ்வாறு கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும், இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், இது பாரம்பரியமிக்க இப்பள்ளியின் பெயரை கெடுக்கும் என்றும், இதனை நிறுத்தாவிட்டால் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவம் திருமண்டல நிர்வாகத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

SunderFeb 13, 2025 - 09:35:22 PM | Posted IP 162.1*****

Idhey pondru serubanmai school ellarum vanguranga...

Tuticorin karanFeb 12, 2025 - 11:27:15 PM | Posted IP 162.1*****

Unakku ithai velaiyah pochi csi la poruppula iruntha appo onnum kekkala unna dismiss pannathunala nee intha varathu vara....Ennatha solla ellam kalavani payaluga tha

தமிழ்ச்செல்வன்Feb 12, 2025 - 05:34:56 PM | Posted IP 162.1*****

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க எனவும், பள்ளி பேருந்தை பராமரிக்க டீசல் மற்றும் டிரைவர் சம்பளம் என மாதா மாதம் எல்லா பள்ளிகளிலும் கட்டாயமாக பத்தாயிரம் முதல் 1300 வரை வாங்கப்படுகிறது. ஆனால் ஆசிரியர்கள் கணக்கு கேட்டால் பள்ளி தாளாளர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது... உன்னை என்ன செய்கிறேன் பார் என ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்... இவை போக சங்கப்பணம் என சம்பளத்தில் 3 சதவிகிதம் வேறு மாதந்தோறும் தனியாக செலுத்த வேண்டும். இப்படி பல கோடி வசூல் செய்து பணத்தில் முங்கு நீச்சல் அடிக்கறார்கள் திருமண்டல பாதிமார்கள்...

sam.CFeb 12, 2025 - 04:20:55 PM | Posted IP 172.7*****

how is it? To damage school name by that peoples it self.

ராஜாராம்Feb 12, 2025 - 10:56:17 AM | Posted IP 162.1*****

VGS பள்ளியில் ஏழை, எளிய மக்களிடமும் ரூ 10,000 நன்கொடை கட்டாயமாக வாங்கப்படுகிறது. இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நண்பர் டேவிட்டுக்கு நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory