» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நில பிரச்சனையில் வாலிபருக்கு வெட்டு: விவசாயி கைது
புதன் 12, பிப்ரவரி 2025 8:38:21 AM (IST)
கயத்தாறு அருகே இடப்பிரச்சினையில், வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் பஞ்சாயத்து கரிசல்குளம் வடக்கு தெருவை சேர்ந்த அய்யாச்சாமி என்பவரின் மகன் மதன்குமார் (37), தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்த சோலை என்பவரின் மகன் தாவீது (43). விவசாயி. இவர்கள் இடையே நிலப் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று கரிசகுளம் கிராமத்தில் ஒரு துக்கவீட்டிற்கு தாவீது சென்றுள்ளார். அதே வீட்டிற்கு துக்கம் விசாரிக்க மதன்குமாரும் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாவீது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் மதன்குமாரை சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த மதன் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மதன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆர்தர்ஜஸ்டின் சாமுவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாவீதை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










