» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் : 3 போ் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 8:22:34 AM (IST)
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த 200 கிலோ கடல் அட்டைகளை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா, மருந்து பொருட்கள் மற்றும் வெடிகள் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக ஏ.எஸ்.பி. மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ஒரு மினி லாரி கடற்பகுதியில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 3 பேர் மினி லாரியிலிருந்து கடல் அட்டைகளை இறக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் மினி லாரியிலிருந்த 200 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையைச் சேர்ந்த செய்யது சாகுல்ஹமீது (37), தூத்துக்குடி, திரேஸ்புரம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மன்சூர்அலி (36) மற்றும் முகமது ஷெரீப் (30) என்பது தெரியவந்தது. ஆண்மை விருத்தி மருந்து தயாரிக்க மன்னார் வளைகுடாவின் அரிய வகை கடல் உயிரினமான கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த தனிப்படையினர், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கடல் அட்டைகள், கைதான 3பேர் மற்றும் மினிலாரியை தூத்துக்குடி வடபாகம் போலீசாரிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










