» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)
பேக்குளத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் விலங்குடையான். விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் இரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் விவசாயத்தை கவனித்து வந்ததுடன் பால் வியாபாரமும் செய்து வந்தார். பேய்குளத்தில் இரு இடங்களில் வைக்கப்பட்ட பால் கடைகளில் அவருக்கு உதவியாக இரு மகள்களும் இருந்து வந்துள்ளனர்.
அதில் முதல் மகள் இந்திரா (24 )முனைஞ்சிப்பட்டி சாலையில் உள்ள பால் கடையை கவனித்து வந்துள்ளார். இன்று மாலை இந்திரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டைப்பூட்டி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய தந்தை விலங்குடையான் சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரி பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாககுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
