» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)



புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்தள்ளது. திருத்தலம் தென்னகத்து புதுவை என அனைத்து மக்களாளும் போற்றப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுப் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்றது. 

திருவிழாவை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலம் என்றாலும், அனைத்து சமயத்தினரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

திருவிழா திருப்பலிக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, விருதுநகர், மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு காலை புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக உப்புயை தூவியும், கும்பிடு சரணம் போட்டு இறைமக்கள் தனது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
அப்போது பலர் குழந்தைகளை விற்று வாங்கினார்கள். 



விழாவில் 100-க்கும் மேற்பட்ட பங்குதந்தைகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மோட்சராஜன், உதவி பங்கு தந்தை மிக்கேல் சாமி,  ஆன்மீகத்தந்தை சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருள்சகோதரிகள், ஆலய இறைமக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory