» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
திங்கள் 10, பிப்ரவரி 2025 4:52:54 PM (IST)

தூத்துக்குடியில் சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சி 3வது மைலில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரக்கூடிய பிரதான சாலையாக சர்வீஸ் ரோடு அமைந்துள்ளது. பக்கிள் ஓடைக்கு அருகில் இருப்பதால் மக்கள் அதிகமாக பயன்படுத்தக் கூடிய சாலையாக இருக்கிறது.
இந்த சாலையை பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் பயன்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்தப் பகுதியில் மழைநீரை வெளியேற்றுவதற்காக மூடியிருந்த கழிநீர் வாய்காலை திறந்து விட்டார்கள். அதன் பின்னர் 2 மாதம் ஆகியும் இன்று வரை சரி செய்யப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
சர்வீஸ் ரோடு இருப்பது தெரிந்தவர்கள் பிரச்சினை இல்லாமல் வருகிறார்கள். தெரியாதவா்கள் இந்த பாலத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் உடனடியாக சர்வீஸ் சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
MURUGANFeb 11, 2025 - 04:25:44 PM | Posted IP 162.1*****
near election repair work done . true or false
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











தமிழன்Feb 11, 2025 - 06:07:02 PM | Posted IP 172.7*****