» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நடைபாதையில் உள்ள கடையை அகற்ற வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 3:35:05 PM (IST)
தூத்துக்குடியில் நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜின் பேக்டரி சாலையைச் சேர்ந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் சுகம் ஹோட்டல் எதிர்புறம் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைக்கு செல்வதற்காக கூடுவர்.
இந்நிலையில் வியாபாரிகளை பாதிக்கும் வகையிலும் நடைபாதையில் மாநகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பை உருவாக்கும் வகையில் அந்தப் பகுதியில் தனிநபர் ஒருவருக்கு கடை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கி உள்ள கடை அருகே உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்ம் அமைந்துள்ள பகுதி அருகே அமைந்துள்ளது இதன் காரணமாக மின் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த கடை மூலம் தங்களது வியாபாரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். விதிமுறைகளை மீறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கடையை அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











tuticorianFeb 10, 2025 - 11:15:11 PM | Posted IP 172.7*****