» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அய்யனடைப்பு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் மறியல்!

திங்கள் 10, பிப்ரவரி 2025 12:35:52 PM (IST)



அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவில்லை. தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக பாதிக்கப்படும். இந்த பஞ்சாயத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிப்பதால் வீட்டுவரி, தண்ணீர் கட்டணம், மற்றும் இதர வரிகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும். 

எனவே மக்கள் நலன் கருதி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாதால் மறியலில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான மக்களை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory