» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எலும்பியல் மருத்துவர் சங்கத்தின் மாநில தலைவர் தேர்வு!
திங்கள் 10, பிப்ரவரி 2025 12:15:54 PM (IST)

தமிழ்நாடு எலும்பியல் மருத்துவர் சங்கத்தின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் மணிகண்டனுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
விழுப்புரம் சங்கமித்ரா ஆடிட்டோரியத்தில் எலும்பியல் மருத்துவர் சங்கத்தின் மாநில கருத்தரங்கம் 3 நாட்கள் நடைபெற்றது. இதில், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில தலைவராக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறைத் தலைவர் மருத்துவர் என்.மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டார்.
விழாவில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் மருத்துவரும், பேராசிரியருமான டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் கலந்து கொண்டு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் மணிகண்டனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் இருந்து 1500க்கும் மேற்பட்ட முடநீக்கியல் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










