» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா
திங்கள் 10, பிப்ரவரி 2025 10:49:30 AM (IST)

கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கோவில்பட்டி மாவட்ட மாநாடு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சிதம்பர நாடார் - காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத்தின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணா இராதாகிருஷ்ணன், நீதி தேவதை செய்தி குழுமம் ஆசிரியர் சரவணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன், தூத்துக்குடி புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞான ரமேஷ், தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், சமூக நீதிப் பேரவை பொதுச் செயலாளரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் அஹமது சாகிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மருத்துவர்கள் பூவேஸ்வரி வரதராஜன், லதா வெங்கடேஷ், ராஜேஸ்வரி பிரபு, நகர் மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா சின்னத்துரை, மணிமாலா, ஜாஸ்மின் லூர்து மேரி, உலக ராணி, கோவில்பட்டி பிரைடு சிக்கன் நிர்வாகி ராமலட்சுமி, பிச்சை மாரியம்மாள், சரவணசெல்வி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.
இதையடுத்து மறைந்த செய்தியாளர்கள் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, துணைத்தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், கழுகுமலை பேரூராட்சி தலைவர் அருணா சுப்பிரமணியன், திருநெல்வேலி மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டி.எஸ்.ஆர் சுபாஷ் ஆகியோர் கோவில்பட்டி மூத்த பத்திரிகையாளர்கள், கோவில்பட்டி, விளாத்திகுளம், கழுகுமலை, கயத்தார், எட்டயபுரம் பகுதி செய்தியாளர்களுக்கு விருது வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதையடுத்து 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
இதில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் (விருது குழு) விநாயகா ரமேஷ், கருத்தூரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார், நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம், பாட்டாளி மக்கள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், பொதுச்செயலாளர் வேல்ராஜ், அமமுக நகர செயலாளர் என்.எல்.எஸ். செல்வம், தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ், காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யலுச்சாமி, இ.வாகன சேவை கணேஷ்குமார், ஓடைப்பட்டி வன்னி விநாயகர் திருக்கோவில் அறங்காவலர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் கயத்தார் வட்டாட்சியர் சுந்தர் ராகவன்,வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், மாடார்ன் ஹார்டுவேர் உரிமையாளர் ரமேஷ் குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி சேதுரத்தினம், நகர்மன்ற உறுப்பினர் கவியரசு, பாஜக நகர தலைவர் காளிதாசன், தேமுதிக நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், தமிழ்ப் பேரரசு கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் சரவணன், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன், ராசி சிஸ்டம்ஸ் உரிமையாளர் அசோக், கோவில்பட்டி பிரைடு சிக்கன் நிர்வாகி ரவி, கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கார்த்திக், செயலாளர் கண்ணன், சமூக ஆர்வலர்கள் ராஜேஷ் கண்ணா, குருசாமி, பரமசிவம், சுதாகர், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாரதியார் அறக்கட்டளை முத்து முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










