» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:21:07 AM (IST)
திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஒரு கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமானின் படை வீடு அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்க கடலோரம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும்.இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். மேலும் தைப்பூசம் விசாகம் மாசிதிருவிழா பங்குனி உத்திரம் கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாவின் போதும் பல லட்சகணக்கான மக்கள் வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பல நூற்று கணக்கான பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரில் இரண்டு பேருந்து நிலையங்கள் இயங்கி வந்த நிலையில் நகருக்குள் அதிக அளவிலான போக்குவரத்து நெருக்கடியால் வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் பகத்சிங் பேருந்து நிலையத்தில் தான் நிறுத்தப்படுகிறது எனவே இப்பேருந்தானது கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியுள்ளது.
குறிப்பாக இன்று திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்குள் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்ற நிலையில் பல பேருந்துகள் உள்ளே வர முடியாமலும் உள்ளே நின்ற பேருந்துகள் வெளியே செல்ல முடியாமலும் சிக்கியுள்ளது. மொத்தம் 12 பேருந்துகள் நிற்கும் அளவிற்கே பேருந்து நிலையம் உள்ள நிலையில் ஆனால் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்பதால் நெருக்கடி உருவாகியுள்ளது எந்த பேருந்து எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை.
மேலும் ஆம்னி பேருந்துகள் மினி பேருந்துகள் நிற்பதற்கும் இடம் இல்லை. எனவே எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருச்செந்தூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம். திருச்செந்தூரை திருப்பதிக்கு நிகராக மாற்றப்படும் என அரசு அறிவித்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்கள் கருத்து
premFeb 11, 2025 - 09:08:13 AM | Posted IP 172.7*****
very good , nice initiative. let us hope . bring to Government attention
C selvamFeb 10, 2025 - 02:14:08 PM | Posted IP 172.7*****
🌾🌾🌾 ராஜா சார் உங்களோட முயற்சிக்கு வெற்றியுடன் அமைய வாழ்த்துகிறேன் கண்டிப்பாக இரண்டு பேருந்துகள் தேவைப்படுது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் யூஸ்புல்லா இருக்கும்
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











செய்யதுஉமர்Feb 12, 2025 - 10:48:56 PM | Posted IP 162.1*****