» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தவறான கணக்கு போடுகிறது : அமைச்சர் கீதா ஜீவன்பேச்சு
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 9:17:31 AM (IST)

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து விளாத்திகுளத்தில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று பேசுகையில், "பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. பேருக்கு ஒரே ஒரு திருக்குறளை மட்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்தால் மக்கள் நம்மளை ஏற்றுக் கொள்வார்கள் என்று மத்திய அரசு தவறான கணக்கு போட வேண்டாம். மத்திய அரசு அறிவித்த மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 100 நாள் வேலை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதமான திட்டமும் ஒதுக்கீடு செய்யவில்லை.
ஆனால் மத்திய அரசு பொருளாதார அறிக்கையிலும் நிதி அயோக் அறிக்கையிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறார்களே தவிர எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. 2015 ல் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுனாங்க அதுக்கும் எந்த விதமான நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. ஆனால் அம்பானி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 லட்சம் கோடி கடனை தள்ளுபடி பண்ணின மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கல்வி கடனை ரத்து செய்யவில்லை. தமிழ்நாட்டில் நல்லா செயல்பட்டுக்கிட்டு இருக்கிற SSI திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யல என்றும் பேசினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு வரவேற்புரை ஆற்றினார், தலைமை கழக பேச்சாளர்கள் ஆரூர் மணிவண்ணன், திருப்பூர் கூத்தரசன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, மாரிமுத்து, ராமசுப்பு, அன்பு ராஜன், நவநீதக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










