» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம்: சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்!
சனி 8, பிப்ரவரி 2025 8:11:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 48 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஆகியவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்வது பற்றியும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 48 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










