» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை சரக போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படை வெற்றி : எஸ்பி வாழ்த்து

சனி 8, பிப்ரவரி 2025 3:15:17 PM (IST)



திருநெல்வேலி சரக அளவிலான 29வது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு இடையேயான 29வது சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து கடந்த 01ஆம் தேதி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு கொடிஅணிவகுப்பு, 100மீட்டர் ஓட்டப்பந்தயம், 400மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் முதலிடத்தை பிடித்தும் ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தும் வெற்றி பெற்றனர்.

மேற்படி சரக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஊர்காவல்படை வட்டார தளபதி பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory