» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காமநாயக்கன்பட்டியில் பிரபஞ்சம் நிகழ்ச்சி: கோள்களை கண்டு ரசித்த பொதுமக்கள்!
சனி 8, பிப்ரவரி 2025 3:11:58 PM (IST)

காமநாயக்கன்பட்டியில் நடந்த பிரபஞ்சம் நிகழ்ச்சியில் வானில் அணிவகுத்து நின்ற நிலா மற்றும் கோள்களை டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் வானியல் கருத்துக்களை பரப்பிட மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப்புகளை உருவாக்கி அதன் மூலம் ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி,100 இடங்களில் நிலா திருவிழா, ஸ்கோப் பெஸ்டிவல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி முடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக 5000 இடங்களில் பிரபஞ்சம் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் வானியல் கருத்துக்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. காமநாயக்கன்பட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கடந்த 3ம் தேதி முதல் நாட்டு நலப்பணிதிட்ட முகாம் நடந்து வருகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் 2 டெலஸ்கோப்புகள் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர்முத்துசாமி, தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முத்து முருகன், சுரேஷ்குமார் ஆகியோர் டெலஸ்கோப்பில் வானில் தெரிந்த வியாழன், வெள்ளி, செவ்வாய், கோள்களையும் நிலாவினையும் பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்கு பயிற்சிஅளித்தனர்.
இதில் கல்லூரி செயலாளர் கண்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன்,நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிங் ராஜ்,பேராசிரியர் கற்குவேல் உள்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










