» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக பாக முகவர்கள் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 8, பிப்ரவரி 2025 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் 6 மற்றும் 7வது வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் MCF கம்பெனி வளாகத்திலும், 9 மற்றும் 23வது வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அன்னதாய் திருமண மண்டபத்திலும், போல்பேட்டை பகுதிக்கு உட்பட்ட 1,13,14 ஆகிய வார்டுகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், 20வது வார்டுக்கான பாக முகவர்கள் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்திலும், 21 மற்றும் 11வது வார்டுகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் கலைஞர் அரங்கிலும் நடைபெற்றது.
இக்கூட்டங்களில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு கழக வளர்ச்சி பணிகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் இன்பா ரகு, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி, சேகர், சுரேஷ்குமார், தினகரன், ராஜாமணி, காளிதுரை, மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், பிரவீன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் எமல்டன் உள்பட பலர் கலந்து காெண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










