» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காமநாயக்கன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:53:02 PM (IST)

காமநாயக்கன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாமினை திருத்தல பேராலய பேராயர் அந்தோணி குரூஸ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட முகாமில் விருதுநகர் ரோட்டரி சங்கம்.சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கண் பரிசோதனை முகாமினை காமநாயக்கன்பட்டி திருத்தல பேராலய பேராயர் அந்தோணி குரூஸ் தொடங்கி வைத்தார்.
கண் மருத்துவர் தரணி தங்கராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் வடிவேல் ராமையா, சொர்ணா நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின்ஜோஸ், புனித அலோசியஸ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ்,பேராசிரியர்கள் விஜய கோபாலன், கற்குவேல், ஜெயசிங் ராஜ்,சொர்ணா நர்சிங் கல்லூரி ஆசிரியை ரின்ஸிமோல், உள்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










