» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆலந்தலை திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி
வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:43:33 PM (IST)

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் பிப்ரவரி மாத முதல் வெள்ளியான இன்று சிறப்பு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் விமர்சனங்களை எதிர்கொள்ள வரம் நல்கும் இயேசுவின் திரு இருதயமே என்ற தலைப்பில் சிறப்பு நற்செய்தியை வழங்கினார்.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக சிறப்பு அழைப்பளர் குழித்துறை ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ், திருத்தல நிதி குழுவினர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். பின்னர் திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி மற்றும் திருத்தல நிதி குழுவினர் செய்திருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










