» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:50:32 PM (IST)
தூத்துக்குடி விமான நிலையத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூலக்கரப்பட்டி பேரூராட்சி கிளைச் செயலாளர் குழந்தைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் அரசு சுற்றுப்பயணமாக வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசின் முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் நெல்லையிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். விமான நிலைய நுழைவாயில் முதல்வர் ஸ்டாலின் நெல்லை கிழக்கு மாவட்ட மூலக்கரபட்டி பேரூர் கழக கிளைச் செயலாளர் முருகையா பாண்டியன், சிதம்பர வடிவு தம்பதியரின் இரண்டு மாதங்களாக குழந்தைக்கு பெயர் சூட்டப்படாமல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செந்தாமரை என பெயர் சூட்டினார். அப்போது சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே என் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், சண்முகையா, மார்க்கண்டேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்பட பலர் உடன் இருந்தனர். தங்கள் குழந்தைக்கு திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டியது தங்களுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி என அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










