» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:39:29 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 20வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், புதூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம். ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 20 கிராம ஊராட்சிகளில் பிப்.3ம் தேதி முதல் 7ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம்,கோவங்காடுகிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தினை சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.

கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கிராம வள பயிற்றுநர்கள் சீதா,சங்கரி, முருகேஸ்வரி, ஜெய செல்வி ஜூலியட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த முருகன் நன்றி கூறினார். இதேபோல் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சள்நீர் காயல், கொற்கை, உமரிக் காடு, திருப்பணி செட்டிகுளம், சூழ வாய்க்கால் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


மக்கள் கருத்து

RameshFeb 8, 2025 - 12:29:03 PM | Posted IP 162.1*****

Congratulations 💐💐💐

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory