» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:29:52 PM (IST)



விளாத்திகுளத்தில் பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 8.00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் யாகசாலை தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. 

பின்னர் காலை 9 மணியளவில் யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி அம்பாள், சண்முகர், விநாயகர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் சுவாமி அம்பாள் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீரால் கும்ப அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், திருநீறு மற்றும் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. விழாவில் விளாத்திகுளம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory