» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமமுக முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகல் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:14:12 PM (IST)

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தாங்கள் விலகி கொள்வதாக அறிவித்தனர்.
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாநகர பகுதியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பகுதி செயலாளர்கள், மற்றும் வட்ட செயலாளர்கள் அனைவரும் முன்னாள் மத்திய மாவட்ட மாநகர செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டரின் ஆலோசனைக்கிணங்க தங்களை அமமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
பகுதி செயலாளர்கள் திரேஸ்புரம் பகுதி ஜான் பெர்னான்டோ, முத்தையா புரம் பகுதி மதன் குமார், சண்முக புரம் பகுதி முத்து செல்வம், வார்டு செயலாளர்கள் அய்யப்பன், முத்துச் சாமி, பவுல் ராஜ், மோச்சையா, டில்டன், ஹெரிங்டன், ஜெனிபர், வின்சென்ட், ரவின்டோ, முத்தையா புரம் பகுதி மாரிசெல்வம, செல்வக்குமார், முகமது ஹசன், மணிகண்டன், அணிச் செயலாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தாமஸ் ஜோவர், மகளிரணி செயலாளர் முத்து மணி, மாணவரணி செயலாளர் பிரபாகரன், இளம் பெண்கள் பாசறை அன்னலெட்சுமி, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட மாநகர செயலாளர் பதிவி வகித்த வழக்கறிஞர் பிரைட்டர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர், மற்றும் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து அக்கட்சியில் இருந்த விலகிய நிலையில், விரைவில் அவர்கள் அனைவரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










