» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதன் 8, ஜனவரி 2025 8:45:25 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன் கிழமையான இன்று (08.01.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 6 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 88 மனுதாரர்கள் என மொத்தம் 94 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீரக்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் : இ-ஃபைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:15:15 PM (IST)

தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் பொம்மைகள், மெழுகுவர்த்தி விற்பனை!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:09:14 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:55:27 AM (IST)










