» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 7, ஜனவரி 2025 12:20:24 PM (IST)

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வேண்டும், சமீபத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் தொகை வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு தூத்துக்குடி வடக்குமாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைதலைவர் கொம்பையா பாண்டியன் மாவட்ட துணை செயலாளர் மாரிச்செல்வம், ராஜபாண்டி பொதுகுழு உறுப்பினர் முருகன், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், ஒன்றிய செயலாளர் விளாத்திகுளம் தங்கச்சாமி, மாரியப்பன், கோட்டைச்சாமி கோவில்பட்டி பொன்ராஜ்,புதூர் மணிகண்டன், ஆறுமுக பெருமாள், கயத்தார் நடராஜன், கண்ணண், மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)

ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:11:37 PM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:35:00 PM (IST)

பாஜக சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்
திங்கள் 15, டிசம்பர் 2025 8:32:31 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)










