» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழன்டா சங்கமம் விழா மினி மராத்தான் போட்டி : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 7, ஜனவரி 2025 11:54:32 AM (IST)

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மராத்தான் போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம் கே சின்னத்துரை அண்ட் கோ தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, சத்யா குழுமம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சைன் யோகா பவர் இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டியை புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் தமிழன்டா இயக்க துணை பொதுச் செயலாளர்கள் திருமணி ராஜா, மாரிமுத்து, எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புனித மரியன்னை பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியம், காமராஜ் கல்லூரி உடற் கல்வியியல் உடற்கல்வி இயக்குனர்கள் ஆனந்த், கணேஷ் குமார், புதுக்கோட்டை பாரதி சிலம்பாட்ட கழக தலைவர் மாரியப்பன் மற்றும் மாணவ மாணவியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இந்த மினி மராத்தான் போட்டியில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவர் மாதேஷ் முதல் இடத்தை பிடித்தார். புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் சாமுவேல் இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். இதில் முகேஷ், சஞ்சய் குமார்,அஸ்வின், ராஜ கோபாலன், அஸ்வின், சுதர்சன், தேவராஜ், சுசுத்தி காந்த், அய்யனார் போன்றோருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)

ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:11:37 PM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:35:00 PM (IST)

பாஜக சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்
திங்கள் 15, டிசம்பர் 2025 8:32:31 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)










