» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வௌிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது: மொபட், செல்போன் பறிமுதல்
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:41:11 AM (IST)
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபட், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதை பொருள் தடுப்பு சிறப்பு தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அமுதாநகர் பகுதியில் பரமசிவன் (42) என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார். உடனடியாக தனிப்படை போலீசார் பரமசிவனை மடக்கிபிடித்தனர். அவரிடம் இருந்து 370 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இந்த விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு செல்போன், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர், பரமசிவன், மற்றும் லாட்டரி சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை தென்பாகம் போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)

ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:11:37 PM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:35:00 PM (IST)

பாஜக சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்
திங்கள் 15, டிசம்பர் 2025 8:32:31 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)










