» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லஞ்ச வழக்கில் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2025 8:36:03 AM (IST)

தராசு முத்திரையிட உரிமம் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேற்கு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (66). இவர் தராசு முத்திரையிடுவதற்கான உரிமம் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பித்தார். இதற்காக கடந்த 20.3.2013 அன்று திருச்செந்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் காளிராஜை சந்தித்தார். அப்போது காளிராஜ் தராசு முத்திரையிடுவதற்கான உரிமம் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு முத்துராமலிங்கத்திடம் கேட்டார். 

அதற்கு அவர் மறுநாள் பணத்தை கொண்டு வந்து தருவதாக கூறி சென்று விட்டார். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துராமலிங்கம், இதுகுறித்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், மறுநாள் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை முத்துராமலிங்கம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் காளிராஜிடம் சென்று கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக காளிராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வசித்குமார், குற்றம் சாட்டப்பட்ட காளிராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜென்சி ஆஜரானார்.


மக்கள் கருத்து

அட நான் தான்Jan 9, 2025 - 04:13:35 PM | Posted IP 162.1*****

பணமாக அல்லாமல் , ஸ்டேஷன் கு பேப்பர் கட்டு ஸ்டேஷனரி பொருட்கள் , கோப்புகள் விலை உயர் பேனாக்கள் , கண்கண்ணாடி , ஸ்மார்ட்வேட்ச் , மொபைல் டாப் அப் , இவையெல்லாம் இதில் அடங்காது தானே

MmmmJan 7, 2025 - 01:42:31 PM | Posted IP 172.7*****

3ஆண்டு பத்தாது 14 ஆண்டு போடுங்கள்

ஆனந்த்Jan 7, 2025 - 10:15:09 AM | Posted IP 162.1*****

இதுபோல் செய்தால்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory