» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் திருவள்ளுவர் சிலை : செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி!

புதன் 1, ஜனவரி 2025 8:21:13 AM (IST)



தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர்  சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து வருகின்றனர். 

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, திருவள்ளுவர் புகழை தமிழகம் முழுவதும் பறைசாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று திருவள்ளுவர் சிலைகளும் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து தூத்துக்குடி முத்தநகர் கடற்கரையில் கன்னியாகுமரியில் அமைந்து உள்ள திருவள்ளுவர் சிலை போன்ற அமைப்பில், 10 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நேற்று அமைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலை தத்ருபமாக கற்சிலை போன்று காட்சி அளிக்கிறது. இந்த சிலை முன்பு நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

SudhakarJan 4, 2025 - 03:36:12 PM | Posted IP 162.1*****

அருமை திருவள்ளுவர் புகழ் ஓங்குக.

பின்னாடி பாருங்கJan 2, 2025 - 09:22:39 PM | Posted IP 172.7*****

ஒரு " T " எழுத்தை காணவில்லை , யாராச்சும் ஆட்டைய போட்டுட்டாங்களா ?

Muthulakshmi.SJan 2, 2025 - 03:18:44 PM | Posted IP 172.7*****

Superb nice effort👍

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory