» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்: 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்
வெள்ளி 20, டிசம்பர் 2024 3:54:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கச்சேரி தளவாய்புரம் உட்பட 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 14வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் டிச 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கச்சேரி தளவாய்புரம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் மரிய நட்சத்திரா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சேர்ம பொன் செல்வி ஒன்றிய உதவி பொறியாளர் பத்மாவதி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சிவபெருமாள் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் வேலை அட்டை புதுப்பித்து தர வேண்டி மனு அளித்த காசியம்மாளுக்கு உதவி பொறியாளர் பத்மாவதி புதிய வேலை அட்டை வழங்கினார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கிராம வள பயிற்றுநர்கள் முத்துமாரி, விசாலாட்சி, ஆனந்தி, முத்துலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் வேல் தாய், முகுந்தனா. உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் சுதா நன்றி கூறினார். இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளாரம், ஒட்ட நத்தம்,உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)

ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:11:37 PM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:35:00 PM (IST)

பாஜக சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்
திங்கள் 15, டிசம்பர் 2025 8:32:31 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)











m.sundaramDec 20, 2024 - 08:36:30 PM | Posted IP 172.7*****