» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஞாயிறு 3, நவம்பர் 2024 9:10:41 PM (IST)



தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 103வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு வங்கியின் மட்டக்கடை கிளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் வடக்கூர் பேட்டரி சர்ச் வளாகத்தில் உள்ள பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் நடைபெற்றது.

முகாமுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் கௌதமன் தலைமை தாங்கினார். முகாமை பேட் ரிக் சர்ச் குருவானவர் செல்வின் துறை ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.  இந்த முகாமில 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 

மேலும் கண் புரை உள்ளவர்கள் இலவசமாக கண் ஆபரேஷன் செய்வதற்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மட்டக்கடை கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்


மக்கள் கருத்து

KumarNov 4, 2024 - 07:57:13 AM | Posted IP 172.7*****

நிகழ்ச்சி நடக்கும் முன்னர் பதிவிட்டால் பலரும் பயன் பெறுவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory