» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆசிரியர்களுக்கு எண்ணும் பயிற்சி துவக்கம்
செவ்வாய் 25, ஜூன் 2024 3:50:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி மற்றும் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆண்டோ பூபால் ராயர் ஆகியோரின் செயல்முறைகளின் படி 2024-25ம் கல்வியாண்டு 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தூத்துக்குடி நகர்ப்புறம் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் நாள் பயிற்சியை இன்று தூத்துக்குடி நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் தனலட்சுமி, மற்றும் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜாய் விக்டோரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் 147 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 8 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு எண்ணும் எழுத்தும் தமிழ், ஆங்கிலம், கணக்கு குழு செயல்பாடுகள், தொழில்நுட்பத் துணை, ஐயங்களும் தெளிவுகளும், வகுப்பறையில் திறன் பலகை பயன்பாடு ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர்.
பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொடக்க நிலை) .முத்து ஸ்ரீ வரமங்கை பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் தனலட்சுமி, நகர்ப்புற வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பார்வதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
