» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சிக்கு நிதி இழப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவ்வாய் 25, ஜூன் 2024 3:23:17 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு  தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மல்டிலெவல் பார்க்கிங் காய்கனி மார்க்கெட் அருகில் இயங்கி வருகிறது. இப்பார்க்கிங்கில் வாகனங்கள் அதற்கான இயக்கப்பட்டு கட்டணம் மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இங்கு வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்திற்கு உரிய ரசீது வழங்காமல் ரசீது வழங்கும் கருவி பழுது மாநகராட்சிக்கு பெயரில் சில என்ற வரவேண்டிய வருவாய் மாதங்களாக உரிய முறையில் மாநகராட்சி ஊழியர்களால் சுரண்டப்பட்டதாக தெரிய வருகிறது. மேற்படி வருவாய் இழப்பு தொடர்பாக சிறப்பு ஆய்வாளர் சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல உதவி ஆணையர், வருவாய் அலுவலர், வருவாய் உதவி அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒருதலை பட்சமான நடவடிக்கை என எண்ணத்தோன்றுகிறது. 

மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாயை சுரண்டியது குற்றம். அதே சமயத்தில் அக்குற்றத்தை நடைபெற விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு மேற்கண்ட அதிகாரிகளுக்கும் உண்டு. மேற்படி அதிகாரிகள் தங்களது பணியினை சரிவர செய்திருந்தால் மாநகராட்சிக்கு இவ்வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்காது என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. தனக்கு கீழ் உள்ள ஊழியர் மாநகராட்சிக்கான வருவாயினை முறைப்படி மாநகராட்சிக்கு ஒப்படைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக மேற்கண்ட அதிகாரிகளை சார்ந்தது.

அப்படி இருக்கும் சூழலில் மேற்படி அதிகாரிகளுக்கு குறிப்பாணை வழங்கியோ விளக்கம் கேட்டோ எவ்வித நடவடிக்கையும் ஆய்வாளர் எடுத்தது போன்று தெரியவில்லை. மேற்படி வருவாய் அலுவலர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் சில சலுகைகள் செய்வதால் அவரை தண்டனையிலிருந்து காப்பாற்றி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. மேற்படி அதிகாரிகள் தங்களது சம்பள பணத்தில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால் இதே போன்று அலட்சியமாக இருப்பார்களா என்று கவனத்தில் கொள்ளவேண்டும். 

கீழ்நிலை ஊழியர் தவறு செய்தாலும் அத்தவறை கண்டு பிடிக்காமல் இல்லை கண்டுபிடித்தும் கண்டுபிடிக்காதது போல் மேற்படி அதிகாரிகள் இருந்தார்களா என்பதை கண்டிப்பாக விசாரணை செய்து விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டால் தான் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட அதிகாரிகள் பயம் கொள்வார்கள். 

எனவே இதே போன்று வேறு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் நடைபெற்றனவா என்பதை முறையாக தணிக்கை செய்து மேற்படி அதிகாரிகள் அனைவரிடம் இருந்தும் மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு அதற்கு வட்டியும் சேர்த்து அவ்விழப்பை சரி செய்ய வேண்டும், எனவும் தன் கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 

பொதுமக்களிடம் வரி இனங்களை விரைவாக செலுத்த வேண்டும் என தங்களது அதிகாரத்தை செலுத்தி கேட்கக்கூடிய மேற்படி அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ள ஊழியர் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதை தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. எனவே இவ்விசயத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்கள் நியாயமாக ஒரு தலைபட்சம் இன்றி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

Ada naan thaanJun 27, 2024 - 10:42:02 AM | Posted IP 162.1*****

ஆட்டோ ல ரேடியோ கட்டி இந்த தேதிக்கு முன் கட்டுங்க... இல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் என்று சொல்லும் அக்கறையில் 1% இருந்தால் கூட இவர்களில் இவர் ஒருவராவது இதை தடுத்து இருக்கலாம்... அலுவலர்கள், அதிகாரிகளின் அலட்சியம் தான்.... உள்ளடிகள் கூட இருக்க வாய்ப்புகள் அதிகம்...

சமூகத் தொண்டன்Jun 26, 2024 - 12:35:23 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்உள்ள மாநகராட்சி இருசக்கர வாகன காப்பகத்தில் வாகனங்கள் அனைத்தும் வெயிலில் இருக்கின்றன மழையில் நனைகின்றன மழைத் தண்ணீர் தேங்குகின்றன இதை சரி செய்யுமா இந்த மாநகராட்சி

மாமன்னன்Jun 26, 2024 - 12:13:58 PM | Posted IP 172.7*****

எத்தனை லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தாங்களோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory