» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் இறந்த பெண்களுக்கு ரூ.10லட்சம் நிவாரணம் : பாஜக கோரிக்கை!

ஞாயிறு 23, ஜூன் 2024 7:40:06 PM (IST)

முக்காணி பகுதியில் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில், உரிய நிவாரணம் வழங்கவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. 23.06.2024 இன்று முக்காணி சாலையோரம் பஞ்சாயத்து நிர்வாகம் அமைந்து கொடுத்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டுடிருந்த அப்பாவி பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சாந்தி, பார்வதி மற்றும் அமராவதி ஆகியோர் உயிரிழந்தது மிகவும் துரதிஷடவசமானது. மேலும் ஒரு பெண் படுகாயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி அரசின் சார்பாக செய்து தர வேண்டும் என்றும் காயமடைந்த பெண்ணிற்கான மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற பல விபத்துக்கள் நடந்தும் இதுவரையில் வேகத்தடை ஏதும் அமைக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே பாஜக மற்றும் பொதுமக்கள் சார்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த விதமாக நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்கை கையாண்டதாலேயே இன்று இந்த மூன்று உயிர்களை அநியாயமாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் முக்காணி ஊர் ஆரம்பமாகும் இடத்திலும், எல்லையிலும் புதிதாக வேகத்தடை அமைத்து தரவும் முக்காணி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வேகத்தடையை புதுப்பித்து தரவும், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் சாலையை திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பே நவீன விபத்து தடுப்பான் கருவிகளை பொருத்தி முறையாக சீரமைக்குமாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory