» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்
ஞாயிறு 23, ஜூன் 2024 12:06:33 PM (IST)
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள் விழாவில் ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை, மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, புத்தகப் பை உட்பட 300 பேருக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 8 வார்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஜாக்சன், நிமல், ஜேசுராஜ், அஸ்வின், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை 8 வார்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.