» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வியாழன் 20, ஜூன் 2024 3:51:03 PM (IST)தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகள் அகலப்படுத்தப்பட்டும், தரம் உயர்த்தப்படும் புதிதாகவும் போடப்பட்டும் மாநகர மக்களின் தேவை அறிந்து புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்போது பணிகள் நிறைவுற்ற அமெரிக்கன் ஹாஸ்பிடல் முன்புறம் செல்லும் சாலை மற்றும் செல்வநாயகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும் பார்வையிட்டோம். 

அப்பொழுது அந்த சாலையின் திருப்பத்தில் திரும்பும் போது மின் கம்பமானது இடையூறாக இருப்பதாக வந்த தகவலை எடுத்து அதனை அகற்றி இடையூறு இல்லாமல் சாலையின் ஓரத்தில் இடம் மாற்றி உடனடியாக வைக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளோம் மேலும் வரும் நாட்களில் பணிகள் ஆரம்பம் ஆகும் என்று தெரிவிததார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

AdhilakshmiJun 20, 2024 - 10:43:17 PM | Posted IP 172.7*****

G.p.colony ku water tank kattitrukanga yeppa open panvinga pls seekrama open pannunga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory