» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

சனி 15, ஜூன் 2024 10:55:15 AM (IST)



குவைத்தில் தீவிபத்தில் உயிரிழந்த வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. 

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் மாரியப்பனும் ஒருவர். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விமான மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. 

அங்கிருந்து தமிழக அரசின் சார்பில் ஆம்புலன்ஸ் மூலமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

தொடர்ந்து அவரது உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் சரவணப் பெருமாள், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி, வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி சுந்தரி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால், முத்துராமலிங்கம், அதிமுக நிர்வாகிகள் அலங்கார பாண்டியன், பழனிக்குமார் மற்றும் அண்ணாதுரை, அரசியல் கட்சியினர் , ஊர் மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதையடுத்து அவரது உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசியல் கட்சியினர்,கிராம மக்கள், உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது சடலத்துக்கு மகன் கதிர்நிலவன் சிதைக்கு தீ மூட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory