» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாட்டுப் படகுகளை மீன்வளத் துறையினர் ஆய்வு

சனி 15, ஜூன் 2024 7:52:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகளை மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்வளத்துறை சாா்பில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் ஆகியவை கடலில் இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள 551 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடா்ந்து, நாட்டுப்படகுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பாா் முதல் பெரியதாழை வரை உள்ள மீனவ கிராமங்களில் சுமாா் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் உள்ளன. அதன்படி, தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) காசிநாத பாண்டியன் தலைமையில், உதவி இயக்குநா்கள் விஜயராகவன், புஸ்ரா சப்னம், ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை உள்பட 82 அலுவலா்கள் 41 குழுக்களாகப் பிரிந்து மீனவ கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

நாட்டுப்படகின் பதிவு உரிமம், காப்பீடு, டீசல் புத்தகம் உள்ளிட்டவை முறையாக உள்ளதா, பாதுகாப்பு கருவிகள், அவசர கால கருவிகள் உள்ளதா, படகுகள் இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory