» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீனவா் திடீா் மரணம்: போலீசார் விசாரணை
சனி 15, ஜூன் 2024 7:43:09 AM (IST)
சாத்தான்குளம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய மீனவா் திடீரென உயிரிழந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் கோடிமுனை சைமன் காலனியை சோ்ந்தவா் பிரிமினஸ் (65). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி இறந்துவிட்டாா்; 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா் கடந்த 2 மாதங்களாக பெரியதாழை பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்தாா். கடந்த 2ஆம் தேதி பெரியதாழையை சோ்ந்த மானசா, ரூபன், ரோசன் ஆகியோருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்று விட்டு மறுநாள் காலையில் சக மீனவா்களுடன் கடற்கரை திரும்பினாா்.
பின்னா், படகில் இருந்து மீன் வலைகளை இறக்கி கொண்டிருந்த பிரிமினஸ் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவா் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் பெனோரோஸ் ஜீன்சன், குலசேகரன்பட்டினம் கடலோர காவல் படை மூலம் தட்டாா்மடம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










