» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் பைக் திருடிய வாலிபர் கைது!
வெள்ளி 14, ஜூன் 2024 5:49:42 PM (IST)
கோவில்பட்டியில் ரூ.75ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்து வாகனத்தை மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் ராஜேந்திரன் (62) என்பவர் நேற்று தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி மகன் கனகராஜ் (38) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நீதிவேந்தன் மற்றும் போலீசார் கனகராஜை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ. 75,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
