» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெள்ளி 14, ஜூன் 2024 4:59:58 PM (IST)



தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் வருமான வரித்துறை சார்பில் "வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் திருநெல்வெலி வருமான வரித்துறை சார்பில் "வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி வருமான வரித்துறை இணை ஆணையர் மனோஜ் பிரகாஷ் மற்றும் உதவி ஆணையர் காசி சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர். தூத்துக்குடி வருமான வரி அதிகாரி செண்பகம் வரவேற்புரையாற்றினார். 

அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் தமிழரசு மற்றும் முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ் ஆகியோர் பேசுகையில், "வருமான வரி செலுத்துவது குறித்து விழிப்புனர்வு நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் வரி செலுத்துவோர்கள் தாங்கள் வருமான வரி செலுத்துவது, ரிட்டன் தாக்கல் செய்வது பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமையும் என்றனர். 

சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் "மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள் குறித்தும், டிஜிட்டல் யுகத்தில் வரி செலுத்துவோரின் பங்கு மற்றம் கடமைகள், வரி செலுத்துவோரின் குறைகளுக்கான தீர்வுகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். 

தற்சமயம் வருமானவரி செலுத்துவோருக்கு வருமானவரியை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நான்கு தவணைகளாக செலுத்தும்படி இலகுவாக்கப்பட்டுள்ளது எனவும், வருமானவரி வரி ரிட்டன் தாக்கல் செய்வது பற்றியும் தெளிவாக கூறினர். இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரும் எழுப்பிய சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தனர். நிறைவாக வருமானவரி அதிகாரி சிவபாலன் நன்றியுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory