» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

வெள்ளி 14, ஜூன் 2024 9:52:50 AM (IST)

கீழவல்லநாடு உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தூத்துக்குடி ஊரக மின்விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கீழவல்லநாடு உபமின் நிலையத்தில் நாளை (ஜூன் 15, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வல்லநாடு உபமின் நிலையம் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கலியாவூர் தலைமை நீரேற்றும் நிலையம், கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் திருவேங்கடநாதபுரம் ஆகிய இடங்களுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

காசிலிங்கபுரத்தில் மின்தடை

காசிலிங்கபுரம், வடக்கு காரச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற மின்விநியோக செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர்ப்புற கோட்டம், கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 15, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடக்குகாரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவாலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.தளவாய்புரம், ராமசாமிபுரம்புதூர், கொம்புகாரநத்தம், 

செட்டியூரணி, கள்ளன்பருப்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப்தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

லட்சுமணன் சொபுரம்Jun 15, 2024 - 02:41:06 PM | Posted IP 162.1*****

தகவலுக்குநன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory