» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

வெள்ளி 14, ஜூன் 2024 8:01:45 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் இந்திய மெய்யியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வ.உ.சி கல்வியியல் கல்லூரி  இணைந்து நடத்திய ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர்  த.கனகராஐ  வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கத்தின் நோக்கவுரையை உயிரறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ந.அல்லிமுத்து வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் முன்னால் முதல்வர்  தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக கல்லூரியின் இணைப்பேராசிரியர் பிரேமலதா  நன்றியுரை நல்கினார்.  முதல் அமர்வில் தாமோதரன்  சமூகத்தில் தத்துவ நெறிகளின் பயன்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார். 

இரண்டாம் அமர்வில் இந்திராகாந்தி தேசிய மலைவாழ் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் ஹரிஹரன்  இந்திய சமூகத்தில் தத்துவத்தின் தாக்கம் குறித்து கருத்துரை வழங்கினார். மூன்றாம் அமர்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) பேராசிரியர்  முத்துப்பாண்டி  இந்திய கலாச்சாரத்தின் சாரம் குறித்து கருத்துரை வழங்கினார். 

நான்காம் அமர்வில் அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் இணையவழி கல்வித்துறை போராசிரியர் வாசிமலைராஜா  தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் சமூகத்தாக்கம் குறித்து கருத்துரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில்  சசிகலா  நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் 271 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியில் கருத்தரங்கச் செயலர் அல்லிமுத்து கருத்தரங்க அறிக்கை வழங்கி சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory