» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் ஊழியரை மிரட்டி மது பாட்டில்கள் பறிப்பு: வாலிபர் கைது

வெள்ளி 14, ஜூன் 2024 7:44:11 AM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை ஊழியரை மிரட்டி மது பாட்டில்களை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி 2ஆம் ரயில்வே கேட் சத்திரம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கடந்த 10ஆம் தேதி வந்த சிலா், ஊழியா்களை இரும்புக் கம்பியைக் காட்டி மிரட்டி மது பாட்டில்களை பறித்துச் சென்றனராம். இது தொடா்பாக கடையின் மேற்பாா்வையாளா் சோமு (52) அளித்த புகாரின்பேரில் வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் ஜேம்ஸ் என்ற ஜேம்ஸ் சந்தோசம்(23), பூபாலராயா் புரத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் பாலமுருகன் (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். ஜேம்ஸ் சந்தோஷத்தை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory