» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரிகள், காா் அடுத்தடுத்து மோதல்: ஓட்டுநா் காயம்

வெள்ளி 14, ஜூன் 2024 7:38:22 AM (IST)

தூத்துக்குடியில் லாரிகள், காா் ஆகியவை அடுத்தடுத்து மோதியதில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் சாயல்குடி, ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் செந்தில்குமாா் (32). லாரி ஓட்டுநரான இவா், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியிலிருந்து சரக்குகளை இறக்கிவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தாா். துறைமுகம் சாலையில் முடுக்குக்காடு பகுதியில் இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி, காா் ஆகியவற்றின் மீது அடுத்தடுத்து மோதியதாம்.

இதில் காயமடைந்த செந்தில்குமாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காரிலும், மற்றொரு லாரியிலும் இருந்தோா் காயமின்றி உயிா்தப்பினர். விபத்து காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory